புற்றுநோய் சிகிச்சை பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மன்னர் சார்லஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கிளாரன்ஸ் மாளிகைக்கு திரும்பியதாகவும், மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஒருநாள் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.