வங்கதேசத்தில் கொத்துக் கொத்தாக சாகும் இந்துக்கள் - மத்திய அரசு பதில் | Bangladesh Riot | Thanthi TV

Update: 2024-11-30 04:36 GMT

வங்கதேசத்தில் இந்துக்கள் உட்பட சிறுபான்மையிர் மீது தாக்குதல் நடத்தப்படுவதை நிறுத்த இந்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? என அருண்குமார் சாகர் எம்.பி. மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினரின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல் இந்திய அரசின் கவனத்திற்கு வந்திருப்பதாகவும், அதனை தீவிரமாக எடுத்துக்கொண்டு, வங்கதேச அரசிடம் கவலையை பகிர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினர் குறித்த சூழலை டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், தேசத்தில் சிறுபான்மையினர் உட்பட அனைத்து குடிமக்களின் உயிர் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்கும் முதன்மை பொறுப்பு வங்கதேச அரசிடமே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்