ஏமன் தலைநகர் சனாவில், அமெரிக்க ராணுவம் தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் வகையில், அமெரிக்கா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. வடமேற்குப் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலால் பல இடங்கள் புகைமூட்டமாக காட்சியளித்தது.