வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து கார்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு, ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பால் அமெரிக்காவின் பொருளாதாரம் மேம்படும் என்றும், உள்நாட்டில் மோட்டார் வாகன உற்பத்தி அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.