அமெரிக்கர்களின் “பிசாசு எரிப்பு“ திருவிழா...

x

நம்ம ஊர்ல பொங்கல் வந்துச்சுன்னா போதும், வீட்ல இருக்குற பழசு பட்டையெல்லாம் எடுத்துட்டு போய் போகி அன்னிக்கு போட்டு எரிப்போம்....

அதே மாதிரி அரக்கனோட பொம்மய எரிக்குற திருவிழாவெல்லாம் நிறையா பாத்து இருக்கோம்...

இந்த ரண்டையும் மிக்ஸ் பண்ணி “பிசாசு எரிப்பு“-னு ஒரு திகிலூட்டும் திருவிழாவ கொண்டாடுறாங்க மத்திய அமெரிக்க மக்கள் ...

கையில திரிசூலத்தோட இருக்குற இந்த சூனிய பொம்மைய எரிக்குறது தான் இவங்களோடு வினோதமான திருவிழா. மத்திய அமெரிக்காவின் Guatemala நகரத்துல தான் இந்த டெரர் திருவிழா நடக்குது.

இந்த நகரமே ஒரு பழமையான பழக்கவழங்களையுடயது. அதுனால இவங்களோட திருவிழாக்களும் அப்படி தான் இருக்கும்... அதுல ஒன்னு தான் இந்த சாத்தான் எரிப்பு...

கிறிஸ்மஸ் வந்துட்டா போதும், நம்ம ஊர்ல கடைகள்ள ஸ்டார் விக்குற மாதிரி, Guatemala- வுல சிவப்பு கலர்கள மண்ட மேல கொம்பு வச்ச இந்த சாத்தான் பொம்மைய விக்க ஆரம்பிச்சுடுவாங்க.

இத ஒவ்வொருத்தரும் வீட்டுக்கு வாங்கிட்டு போயி, தீவச்சி கொளுத்தி கிறிஸ்மஸ கோலாகலமா தொடங்குறாங்க... வீட்ல தான் இப்டி பண்றாங்கனு பாத்தா, Guatemala மக்கள் எல்லாரும் ஒன்னு சேர்ந்து நகரத்தோட மத்தியில ஒரு பெரிய சூனிய பொம்மைய உருவாக்குறாங்க.

டிசம்பர் மாசத்தோட முதல் ஞாயித்துக்கிழமை நைட்டு தான் சம்பவம் இருக்கு. பாத்ததும் பீதிய கிளப்புற அந்த சாத்தான் பொம்மைய தீவச்சி எரிச்சு கொடூரமா கொண்டாடுறாங்க...

ஏன் இவ்ளோ கொடூரமா இந்த திருவிழாவ கொண்டாடுறீங்கனு கேட்டா, வீட்டுல இருக்குற கெட்ட சக்திகள போக்குறதுக்காகவும், அடுத்த வருஷம் ஹேப்பியா இருக்கனும்னு அமானுஷ்ய கதையெல்லாம் சொல்றாங்க

நம்ம ஊர்ல பேய் புடிச்சவங்கள என்ன பண்ணுவாங்க... துடப்பத்தால அடிப்பாங்க, வேப்பிலையால அடிப்பாங்க, சாட்டையால அடிப்பாங்க.

ஆனா இந்த பாரீன்காரங்க கொஞ்சம் வித்தியசமாவே தான் இருப்பாங்க போல, என்னன்னா துடப்பத்த நெருப்புல முக்கி ஜகஜோதியா எரியவிட்டு ரோட்ல போறவரவன எல்லாம் சாத்து சாத்து சாத்துறாங்க... என்னடானு கேட்டா விளையாட்டாம்.

இதோட பேரு Escobazos Festival. உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லனும்னா தீப்புடிச்ச தொடப்பத்தால அடிக்குற திருவிழா.

இப்டி பேர வச்சது மட்டுமில்லாம, கடவுள் தான் இப்படி பண்ண சொன்னாருனு மக்கள் நம்புறாங்க. பல நூற்றாண்டுகளா இந்த நாட்டு மக்கள் ஒவ்வொரு டிசம்பர் மாசமும் இந்த துடப்பம் திருவிழாவ கட்டாயம் நடத்திடுவாங்க.

இலை, குச்சி, மரத்தோட கிளைகள்னு இயற்கை பொருட்களால செய்யப்பட்ட தெரு பெருக்கும் விளக்குமாறு தான் இந்த திருவிழாவின் அச்சாணி.

எல்லாரும் ஆளுக்கொரு விளக்குமாறு செஞ்சிட்டு வந்து, அதோட நுனியில தீய பத்தவச்சி, சும்மா அனல் தெறிக்க தெறிக்க ஆட்கள அடிச்சு ஓட விடுறாங்க.

இப்டி பண்ணும் போது மனிதர்கள பிடிச்சி இருக்குற தீய ஆவிகள் எல்லாம் ஓடி போகுமாம்.


Next Story

மேலும் செய்திகள்