Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-10-2022) | Morning Headlines | Thanthi TV
இந்திய கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவருக்கு நிவாரண உதவி...
அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி, நேரில் சந்தித்து வழங்கினர்...
--------
தீபாவளியையொட்டி 10 ஆயிரத்து 518 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்...
இதுவரை 91 ஆயிரம் பேர் அரசு பேருந்துகளில் சென்றுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தகவல்...
--------
பல மடங்கு கட்டண உயர்வால், வெறிச்சோடிய ஆம்னி பேருந்து நிலையம்...
இதுவரை அதிக கட்டண புகார் எதுவும் வரவில்லை என அமைச்சர் சிவசங்கர் தகவல்...
--------
தமிழகம் முழுவதும் களைகட்டியுள்ள தீபாவளி விற்பனை...
புத்தாடை, இனிப்பு வகைகள், பட்டாசுகள் வாங்க கடைகளில் மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல்...
--------
ஆவின் குறித்து தவறான தகவல்கள் பரப்பினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...
அமைச்சர் நாசர் எச்சரிக்கை...
--------
புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை...
கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு...
----------
புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை...
கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு...
---------------
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் எல்லை 5 மடங்கு விரிவாக்கப்படுகிறது...
ஆயிரத்து 225 கிராமங்களை புதிதாக சேர்த்து 5 ஆயிரத்து 904 சதுர கிலோ மீட்டர் பரபப்பளவுக்கு அதிகரிப்பு...
-----------
தமிழகத்தில் துணைவேந்தர் பதவி 50 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றச்சாட்டு...
தமிழ்நாட்டில் தனது 4 ஆண்டு பதவி காலம் மிக மோசமானது எனவும் கருத்து...
----------
தமிழகத்தில் புதிய மனைப் பிரிவுகளுக்கு அனுமதியளிப்பதில் திருத்திய நடைமுறைகள்...
நகராட்சி நிர்வாகத் துறை வெளியீடு....
----------
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு...
அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...
--------
இந்திய கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நாகை மீனவர்கள் குற்றச்சாட்டு...
நடுக்கடலில் 2 மணி நேரம் கட்டி வைத்து, அடித்து உதைத்ததாகவும் புகார்...
------------
இந்திய கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவருக்கு நிவாரண உதவி...
அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி, நேரில் சந்தித்து வழங்கினர்...