சிவகாசி திருத்தங்கல் அருகே தனியார் கல்குவாரி குட்டையில் அடையாளம் தெரியாத சடலம் மிதப்பதாக தீயணைப்பு துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்டு போலிசார் விசாரணை மேற்கொண்டனர். மீட்கப்பட்ட உடல் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் என்பதும், இவர் சக நண்பர்களுடன் கல் குவாரி பகுதியில் மது அருந்தியதும் தெரிய வந்தது. மது பழக்கத்திற்கு அடிமையான இவர் குளிக்கச் சென்று நீச்சல் தெரியாமல் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.