நீயா நானா.. யாரு ஃபர்ஸ்ட்..? நடுரோட்டில் அப்படியே நின்ற 2 பஸ்கள்

Update: 2025-04-27 03:32 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே, இரு தனியார் பேருந்து ஓட்டுநர்கள் சாலையின் குறுக்கே பேருந்துகளை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எந்த பேருந்து முதலில் புறப்பட வேண்டும் என்ற நேர பிரச்சினையில், இரு ஓட்டுநர்களிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நடு ரோட்டில் பேருந்துகளை நிறுத்திய நிலையில், மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்தில் இருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்