மகா கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்கள் வரலாமா? - யோகி ஆதித்யநாத் பதில்

Update: 2025-01-11 02:51 GMT

12 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஜனவரி 13ம் தேதி மகா கும்பமேளா நடக்கும் திடலில் இஸ்லாமியர்கள் கடை அமைக்கக் கூடாது என எதிர்ப்பு எழும்பியிருந்த நிலையில், கும்பமேளாவில் இஸ்லாமியர்கள் பங்கேற்கலாமா? என்று உத்தரப்பிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் இதற்கு பதில் அளித்துள்ள உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தான் ஒரு இந்தியன் என்பதில் பெருமை கொள்பவர்களும், சனாதனம் மீது மரியாதை கொண்டவர்களும் கும்பமேளாவிற்கு வருவதில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மதம், சாதி போன்ற எவ்வித பாகுபாடும் இன்றி சனாதனத்தின் மீது மரியாதை கொண்ட அனைவரும் விரும்பி வந்து கும்பமேளா சங்கமத்தில் புனித நீராடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்