கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை பகுதியில் வட மாநில தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காட்டு யானையைப் பார்த்து வட மாநில தொழிலாளர்கள் அலறியடித்து ஓடிய நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.