பைக் வாங்கி தர மறுப்பு - இளைஞர் தற்கொலை

x

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே பைக் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால், இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வி.புத்தூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான ராமதாஸ் என்பவரின் மகன் ஐயப்பன், பைக் வாங்கி தருமாறு அடம்பிடித்துள்ளார். போதிய வருமானம் இல்லாததால் பைக் வாங்கி தர பெற்றோர் மறுத்துள்ளனர். இதனால் மனம் உடைந்த இளைஞர் ஐயப்பன், வீட்டில் தூக்கு போட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்