விஜய் வந்த பிரசார வாகனம்.. ஈபிஎஸ் வாங்கிய அதே மாடல்... அடேங்கப்பா இவ்ளோ விஷயம் இருக்கா?
விஜய் வந்த பிரசார வாகனம்.. ஈபிஎஸ் வாங்கிய அதே மாடல்... அடேங்கப்பா இவ்ளோ விஷயம் இருக்கா?
பரந்தூரில் விமான நிலைய போராட்ட எதிர்ப்புக் குழுவினரை விஜய் சந்தித்தது தொடர்பான ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
- காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ள பசுமை வெளி விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அவர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்தார்.
- இதற்காக, பொடவூர் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- திறந்த வாகனத்தில் நின்றபடி தொண்டர்களின் வரவேற்பை விஜய் பெற்றுக் கொண்டார்
- முன்னதாக, பொன்னேரிக்கரை பகுதியில் காரில் விஜய் சென்றபோது, தொண்டர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் எழுப்பினர். உடனே கண்ணாடியை இறக்கி விட்டு, கையசைத்தபடி விஜய் சென்றார்.
- பொன்னேரிக் கரையில் இருந்து பொடவூர் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர்..
- இதையடுத்து பரந்துர் சென்ற விஜய்க்கு கிராம மக்களை சந்திக்கும் வகையில், ஊருக்குள் செல்ல அனுமதி அளிக்கவில்லை.
- இதனால், அங்குள்ள தனியார் மண்டபத்தில் திறந்த வேனில் நின்றபடியே உரையாற்றினார்.
- ஏகனாபுரம் ஊருக்குள் சென்று, மக்களை தான் சந்திப்பதற்கு தமிழக அரசு எதற்காக தடை விதித்தது என புரியவில்லை என கூறிய விஜய், பரந்தூரில் இருந்து தனது கள அரசியல் பயணத்தை தொடங்குவதாகவும் அறிவித்தார்.
- மேலும், மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக எடுத்த நிலைப்பாட்டை பரந்தூர் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தில் எடுக்காதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்
- கள அரசியலை துவங்கியுள்ள விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை போலவே புதிய ஃபோர்ஸ் அர்பேனியா பிரசார வாகனத்தை பயன்படுத்தத் துவங்கியுள்ளார்.
- இந்த வாகனத்தின் அடிப்படை விலை 29 லட்சத்து 83 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.
- மாடலை பொறுத்து ஒரே நேரத்தில் பத்து முதல் 17 பேர் வரை பயணிக்க முடியும். ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி, டூயல் ஏர் பேக் என உயர் தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.
- வெளிப்புறத்தில் அழகிய தோற்றத்துடன் பாதுகாப்பு வீரர்களுக்கான ஸ்டாண்டுகளும் வேனில் உள்ளது.