சிறுத்தை தாக்கி பெண் பலி...அதிகாரிகள் கொடுத்த உறுதி - உடனே உறவினர்கள் எடுத்த முடிவு
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே வனவிலங்கு தாக்கி உயிரிழந்த பெண்ணின் உடலை, அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உறவினர்கள் பெற்றுக்கொண்டு நல்லடக்கம் செய்தனர். துருவம் கிராமம் கொள்ளைமேடு பகுதியைச் சேர்ந்த அஞ்சலி என்றவர், வனவிலங்கு தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு 11 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.