மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ்..! ஆசிரியர் சஸ்பெண்ட்... ஆசிரியர் சங்கம் அதிரடி முடிவு | Vellore

Update: 2024-09-23 01:58 GMT

வளைகாப்பு ரீல்ஸ் வீடியோ விவகாரத்தில், ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு, வேலூர் மாவட்ட ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

வேலூர் அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவிகள் சிலர் பள்ளி வளாகத்திலேயே வளைகாப்பு நடத்துவது போன்று 'ரீல்ஸ்'வீடியோ எடுத்து வெளியிட்டிருந்த நிலையில் வைரலானது. இது, தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாணவிகளின் வகுப்பு ஆசிரியர் சாமுண்டீஸ்வரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார். இதற்கு, வேலூர் மாவட்ட ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நாளை முதல் கருப்பு பட்டை அணிந்து வர தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பணியிடை நீக்கத்தை ரத்து செய்யும் வரை பல்வேறு வகைகளில் மாவட்டத்தில் போராட்டம் தொடரும் என்றும், மாணவ மாணவிகளின் செயல்களுக்கு ஆசிரியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை ஏற்கத்தக்கது அல்ல என்றும் ஆசிரியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்