"இல்லம் தேடி கல்வி" என்ற பெயரில் பண மோசடி - மக்களே உஷார்! | Money Laundering | TN Police | Vellore

Update: 2025-03-18 02:02 GMT

"இல்லம் தேடி கல்வி" பெயரில் சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல் அளித்திருக்கும் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்மை போன்று தனது நண்பர்களுக்கு சென்னையில் உள்ள இல்லம் தேடி கல்வி தலைமை அலுவலகத்தில் இருந்து பேசுறோம் என கூறி மர்ம நபர்கள் தொலைபேசியில் அழைப்பதாகவும், ஐந்தாயிரம் ரூபாய் அனுப்பினால் 42 ஆயிரத்து 500 ரூபாய் தங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் என அவர்கள் கூறுவதாகவும் அவர் புகாரளித்துள்ளார். சில மாணவர்கள் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி ஏமாந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்