8 நாள் பிஞ்சுக்கு எமனான பெற்றோர்?.. கல்லறையான வீடு.. நடந்தது என்ன?..குலைநடுங்கவிடும் தாயின் சிரிப்பு
குழந்தையின் மீது மூத்த மகள் தெரியாமல் பெட்ஷீட்டை போர்த்தியதால், மூச்சுத்திணறி குழந்தை இறந்ததாக கூறுகின்றனர் பெற்றோர் இருவரும்...
குழந்தையின் மீது மூத்த மகள் தெரியாமல் பெட்ஷீட்டை போர்த்தியதால், மூச்சுத்திணறி குழந்தை இறந்ததாக கூறுகின்றனர் பெற்றோர் இருவரும்...
ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கிறார்கள் உறவினர்கள்..
போலீசாரின் விசாரணை தூண்டிலில் அடுத்தடுத்து வந்து விழுந்த தகவல்கள் மூலம் குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறதாம்..
இந்நிலையில், குழந்தையின் பெற்றோர் தலைமறைவாகி இருப்பது உறவினர்களுக்கு சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பொம்மன்குட்டையை சேர்ந்தவர் சேட்டு. 30 வயதான இவருக்கு, டயானா என்ற 20 வயது இளம் பெண்ணுடன் திருமணமான நிலையில், தம்பதிக்கு இரு குழந்தைகள் இருந்தனர்...
இதில், கடந்த 8 நாள்களுக்கு முன்தான் தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது...
இந்நிலையில், கடந்த நான்காம் தேதி, பிறந்து 8 நாள்களேயான குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்ததாக சொல்லி உறவினர்கள் யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறம் புதைத்திருக்கின்றனர் தம்பதி இருவரும்..
வீட்டருகே பப்பாளி மரமும், எருக்கச்செடியும் உடைக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சி
மூத்த மகள் பெட்ஷீட்டை முகத்தின் மீது மூடியதால், குழந்தை உயிரிழந்ததாக கூறி குழந்தையின் தாய் டயானா கூறியிருக்கிறார்..
ஆனால் குழந்தையின் முகத்தில் காயம் இருந்ததை கண்ட, அவரின் டயானாவின் பெற்றோர், பேத்தியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அளித்த புகாரும், குற்றச்சாட்டும்தான் தற்போது மாவட்டத்தை அதிரச் செய்திருக்கிறது...
இதனிடயே, குழந்தையின் சடலத்தை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் கொண்டு சென்ற நிலையில், அங்கு அதிர்ச்சி காத்திருந்தது..
குழந்தையின் உடலில் எந்தவொரு காயமும் இல்லை என கூறியிருக்கின்றனர் மருத்துவர்கள்...
அந்நேரம், தம்பதியின் வீட்டருகே உள்ள பப்பாளி மரமும், எருக்கஞ்செடியும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உடைக்கப்பட்டிருந்த நிலையில், இவற்றின் பாலை குழந்தைக்கு ஊற்றி கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்...
முதலில் பெண் குழந்தை பிறந்த நிலையில், இரண்டாவதும் பெண் குழந்தை என்ற விரக்தியில், குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது...
குழந்தையின் பெற்றோரை போலீசார் வலைவீசி தேடி வரும் நிலையில், பிறந்து 8 நாள்களே ஆன குழந்தைக்கு நேர்ந்திருக்கும் இந்த சம்பவமும், இதன் மர்ம பின்னணியும் வேலூர் மாவட்டத்தை ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது...