பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து காணாமல் போன ரூ. 1 லட்சம் - OTPஐ பார்த்ததும் அதிர்ந்து போன விவசாயி

Update: 2024-11-13 02:52 GMT

விவசாயி வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் ஒரு லட்ச ரூபாய் மாயமான விவகாரம் குறித்த சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் ராஜகுப்பம் பகுதியைச் சேர்ந்த தரணி விவசாயம் செய்து வருகிறார். இவர் நடுப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு வைத்து இருக்கிறார். இந்த நிலையில் வங்கியில் இருந்து ரூ 99 ஆயிரம் எடுப்பதற்கான ஒடிபி எண் தரணியின் செல்போனுக்கு வந்து இருக்கிறது. சிறிது நேரத்தில் மீண்டும் ஆயிரம் ரூபாய் எடுப்பதற்கான ஒடிபி எண் வந்து இருக்கிறது.இதனை தொடர்ந்து தரணியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ 1 லட்சம் மாயமாகி உள்ளது. வங்கி தரப்பில் கேட்ட தரணி கேட்ட போது ஆன்லைன் மூலம் பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்து இருக்கின்றனர்.இது குறித்து வேலூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்