விண்ணதிர நடந்த வாண வேடிக்கை.. வரதராஜ பெருமாள் வீதியுலா உற்சவம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரதராஜ பெருமாள் வீதி உலா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, சிவப்பு பட்டு உடுத்தி, திருவாபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மங்கள, வாத்தியங்கள் முழங்க, வேத பாராயண கோஷ்டி பாடிவர, வரதராஜ பெருமாள், சன்னதி வீதியில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்தார். வழியங்கும் சரவெடி பட்டாசுகள் வெடிக்க, விண்ணதிர வாண வேடிக்கை நடத்தி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர்.