காதலர் தினத்தை முன்னிட்டு, உதகையில் மலர்களின் வரத்து அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் குன்னூர் சுற்றுலா தளங்களில், காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் மற்றும் புது மணத் தம்பதிகளின் வரவு அதிகரித்து காணப்படும். இதனையொட்டி மலர் விற்பனையகங்களில், ரோஜா பூக்கள், கார்னேசன், லில்லியம் உள்ளிட்ட மலர்களின் வரவு அதிகரித்துள்ளது. பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மலர்கள் வரவைக்கப்பட்டுள்ளன