``எனக்கும் என் குடும்பத்திற்கும் ஏதாவது நடந்தால்..’’ - தவெக முன்னாள் உறுப்பினர் வெளியிட்ட வீடியோ
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி சக்திவேல், தி.மு.க பிரமுகர் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். குடும்ப விவகாரத்தில் தி.மு.க பிரமுகர் தலையிடுவதாகவும், தனக்கும், தனது குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும் சக்திவேல் வீடியோ வெளியிட்டுள்ளார்.
சாத்தான்குளம் போலீசார், வழக்கு பதிவு செய்து, சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.