#Breaking : புது சிக்கல்... ரெட் Zone-ஆகும் சென்னை.. வானில் வட்டமடிக்கும் 12 விமானங்கள்..! உச்சகட்ட பரபரப்பு
ஃபெங்கல் புயல் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த துபாய் மற்றும் அபுதாபி ஆகிய 2 விமானங்கள், சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக, சென்னையில் தரையிறங்க முடியாமல், தொடர்ந்து வானில் வட்டமடித்து பறந்து, தத்தளித்துக் கொண்டு இருக்கின்றன.
துபாயிலிருந்து 258 பயணிகளுடன் சென்னைக்கு இன்று காலை 8.10 மணிக்கு தரையிறங்க வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மற்றும் அபுதாபியில் இருந்து 151 பயணிகளுடன் சென்னையில் தரை இறங்க வந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஆகிய 2 விமானங்கள், சென்னை வான்வழிக்கு வந்து தரையிறங்குவதற்காக சுமார் 4,250 அடி உயரத்தில் தாளப் பறந்த போதிலும், விமான நிலைய ஓடுபாதை விமானிக்கு தெளிவாக தெரியாத காரணத்தாலும், அதோடு சென்னை விமான நிலைய பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும், இந்த இரண்டு விமானங்களும் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து வானில் வட்டமடித்து பறந்து தத்தளித்துக்கொண்டு இருக்கின்றன.
இன்னும் சிறிது நேரத்தில் விமானம் தரையிறங்க முடியவில்லை என்றால், இந்த விமானங்கள் அருகில் உள்ள வேறு விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.