தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் எவ்வளவு? - உதயசந்திரன் IAS தகவல்

Update: 2025-03-15 07:26 GMT

தமிழக அரசின் ஒட்டுமொத்த கடன் 8 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக உள்ளதாக கூறிய நிதித்துறை செயலாளர் உதயசந்திரன், இந்த ஆண்டு மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளதாக தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார். அப்போது, நாட்டின் பொருளாதாரத்தில் 9 சதவீதம் தமிழகம் பங்களித்து வரும் நிலையில், பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப சுமார் 26 சதவீதம் அளவிற்கு கடன் வாங்குவதாக அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்