பட்ஜெட்டில் பணி நிரந்தரம் அறிவிக்காததால் பகுதிநேர ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க கோரிக்கை விடுத்துள்ள அவர்கள், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு இந்த பட்ஜெட்டிலேயே பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.