சட்டப்பேரவையில் மாணவர்களுக்கு வெளியான புதிய அதிரடி அறிவிப்புகள்

Update: 2025-03-29 03:20 GMT

சட்டப்பேரவையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மின்சார வாகனம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயிற்சிகள் வழங்க உயர் திறன் மையங்கள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scout திட்டத்தின் கீழ், வரும் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் இருந்து 100 திறமையான மாணவர்களுக்கு உலகளவில் தொழில் பயிற்சிகள் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் 11 பல்கலைக்கழங்களில் நான் முதல்வன் பல்கலைக்கழக செயல் மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்