8 வயது சிறுவனின் கன்னத்தை கடித்து குதறிய தெரு நாய்... பீதியில் ஊர் மக்கள்

Update: 2025-01-30 02:17 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுவனை நாய் கடித்து குதறியுள்ளது. இதேபோன்று அப்பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளரும் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே தொடர்ந்து நாய்க்கடிக்கு ஆளாவதாக அதிருப்தி தெரிவித்துள்ள பொதுமக்கள், உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்