திண்டிவனத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பொதுமக்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரிசி, துணிமணிகள், போர்வை உள்ளிட்ட பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். பின்னர், முதல்வர் சென்றதும், பொருட்களை வாங்கிச் செல்ல பொதுமக்கள் போட்டி போட்டு அள்ளிச் சென்னர். இதனால், திணறிய திமுக நிர்வாகிகள், நலத்திட்ட பொருட்களை தூக்கி வீசினர். அவற்றை பொதுமக்கள் கேட்ச் பிடித்து எடுத்துச் சென்றனர்.