தரக்குறைவாக பேசிய த.வெ.க நிர்வாகி - வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு

Update: 2025-03-27 15:06 GMT

சாதி குறித்து தரக்குறைவாக பேசிய த.வெ.க நிர்வாகி மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். மாற்றுத்திறனாளியான இவர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். விசாரணைக்காக காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த போது, அம்மாள்தோப்பு பகுதியைச் சேர்ந்த த.வெ.க மாவட்ட பொறுப்பாளர் சரவணன் சாதி குறித்தும், அம்பேத்கர் குறித்தும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், சரவணன் மற்றும் அவருடன் வந்து கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச்சட்டம், உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்