விவசாயி பூச்சிமருந்து குடித்து தற்கொலை - இருவர் கைது

x

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தனது நிலத்தில் நெல் நாற்று நடுவதற்காக இருவரை அழைத்து வந்து, அதற்காக ரூபாய் 12 ஆயிரம் கூலி தருவதாகவும் பேசியுள்ளார். பின்னர் வேலை முடிந்து ரூபாய் 6 ஆயிரம் மட்டுமே கூலி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வேலைபார்த்த இருவரும் அவ்வப்போது ஜெகநாதனை பிடித்து பணம் கேட்டு வற்புறுத்தி வந்த நிலையில், அவரின் இருசக்கர வாகனத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் விரக்தியடைந்த ஜெகநாதன் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து ஜெகநாதனின் மனைவி போலீசில் புகாரளித்த நிலையில், போலீசார் மயில்குமார், வெங்கடாசலம் ஆகிய இருவரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்