எருது விடும் திருவிழாவில் மாடு முட்டியதில் ஒருவர் பலி
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பொன்னேரி கிராமத்தில் எருது விடும் திருவிழாவில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் மந்தையில் சீறி பாய்ந்து ஓடிய நிலையில், சின்ன மண்டலவாடி பகுதியைச் சேர்ந்த சின்னமுனுசாமி என்பவர் மாடு விடும் பகுதியை கடக்க முயன்ற போது மாடு முட்டியதில் தூக்கி வீசப்பட்டார்.
அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Next Story