திருச்செந்தூரில் கூடிய திரளான கூட்டம் -கரும்பு தொட்டிலுடன் முருகனை வழிபட்ட பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் கரும்பு தொட்டிலுடன் வழிபாடு செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனத்தில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருகை புரிந்தனர். மேலும், அவர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.