சரவண பொய்கையில் நீராடிய தெய்வானை - மகிழ்ச்சியில் நீரை பீச்சியடித்து குளித்த யானை
திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை, 4 மாத காலத்திற்கு பிறகு மீண்டும் சரவண பொய்கையில் நீராடியது. பிரத்யேகமான குளத்தில் குளித்து மகிழ்ந்த கோவில் யானை, தும்பிக்கையால் நீரை பீய்ச்சியும், உடல் மேல் தெளித்தும் குதூகலித்தது.
கடந்த நவம்பர் மாதம் பாகனை கொன்ற யானை தெய்வானை, கோவிலுக்கு பின்னால் உள்ள அறையில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பொய்கையில் உற்சாகமாக நீராடியது.