தென்பெண்ணை ஆடிய ருத்ரதாண்டவம்... காணாமல் போன 200 ஏக்கர் பட்டா நிலம் - அதிர்ச்சியில் மக்கள்

Update: 2024-12-16 13:07 GMT

ஃபெஞ்சல் புயலால் பெய்த மழையாலும், அதைத் தொடர்ந்து, தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீராலும், கடலூர் மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் இருந்த கிராமங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, ஆற்றின் கரையோரம் உள்ள இரு கரைகளையும் உயர்த்தி பலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள பொது மக்கள், இதுதொடர்பான கோரிக்கை மனுவுடன் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்தனர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் திரண்டு வந்ததால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு கிராமத்திற்கு ஒருவர் என போலீசார் அனுமதித்த நிலையில், அவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அப்போது, தென்பெண்ணை ஆற்றின் வெள்ளம் காரணமாக ஆண்டுதோறும் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால், ஆற்றின் இரு கரைகளையும் உயர்த்தி நிரந்தர தீர்வு அளிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்