பண்ருட்டி அருகே நடந்த அகழாய்வில், 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்து விநாயகர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்று பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வில், செப்பு நாணயம், அகல்விளக்குகள், கீரல் ஓடுகள், சுடுமண் புகைப்பிடிப்பான் உள்ளிட்டவை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 1200 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்லில் வடிக்கப்பட்ட இந்த விநாயகர் சிற்பம் மூன்றரை அடி உயரமும், 95 செ.மீ அகலமும் கொண்டதாக உள்ளது. இவை பல்லவர் காலத்தைச் சேர்ந்தது என கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.