திருட்டு பட்டம் கட்டியதாக பெயர் எழுதி வைத்துவிட்டு பெண் தற்கொலை
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் திருட்டு பட்டம் கட்டியதாக பெயர் எழுதிவைத்துவிட்டு ஸ்டெல்லாமேரி என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ராக்கம்மா என்பவரின் வீட்டில் 3 பவுன் நகை காணாமல் போனதற்கு ஸ்டெல்லாமேரி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் ஸ்டெல்லாமேரியிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், மனமுடைந்த ஸ்டெல்லாமேரி தனது இறப்புக்கு காரணம் இவர்கள்தான் என நான்கு பேரின் பெயரை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story