பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில், சித்திரை தேரோட்ட விழா விமரிசையாக நடைபெற்றது. திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ள, சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த 6ம் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் தேரோட்டத்தை முன்னிட்டு உற்சவரான மாரியம்மன் தேரில் எழுந்தருள, பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மேலும் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.