கரை ஒதுங்கிய ஆயிரக்கணக்கான மீன்கள்... "காரணம்..?" - வெளியான பகீர் காட்சி

Update: 2024-08-25 10:43 GMT

கரை ஒதுங்கிய ஆயிரக்கணக்கான மீன்கள்... "காரணம்..?" - வெளியான பகீர் காட்சி

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே கடலில் ஆயிரக்கணக்கில் கிளாத்தி மீன்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கரை ஒதுங்கியுள்ளன... கரை ஒதுங்கிய மீன்களால் துர்நாற்றமும் வீச துவங்கியுள்ளது.

இது குறித்து ராதாபுரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அதிக அளவில் கிளாத்தி மீன்கள் பிடிக்கப்பட்டு அவை விற்பனை ஆகாததால் கடலில் கொட்டப்பட்டுள்ளதாகவும்

அவை கரை ஒதுங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்... இறந்த மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்