செங்கல் தாக்குதல் - பாட்டி பலி - தப்பியோடிய பேரன்

x

ஆற்காடு அருகே, தனக்கு சொத்து எழுதி வைக்காத பாட்டியை பேரன் செங்கல்லில் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த காவனூர் பகுதியை சேர்ந்தவர் தேவா. இவர் சமீபத்தில் மாற்று சமூகத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதில் ஆத்திரமடைந்த அவரது பாட்டி காசியம்மாள் பேத்தியின் பெயருக்கு தன் சொத்துக்களை எழுதி வைத்தார். இதில் ஆத்திரமடைந்த தேவா காசியம்மாளின் தலையில் செங்கல்லால் தாக்கினார். பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் வெளியேறிய நிலையில் சம்பவ இடத்திலேயே காசியம்மாள் பலியானார். இந்த நிலையில் கொலையாளி தேவாவை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்