தப்பை மறைக்க கேடி வேலை செய்த 2 காவலர்கள்.. கடுமை காட்டிய தாம்பரம் கமிஷனர்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காரில் இருந்த 6 லட்சம் ரூபாய் திருடப்பட்ட விவகாரத்தில், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட மணிமங்கலம் காவல் நிலைய காவலர் சதீஷ்குமார் என்பவர் ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. லஞ்சம் பெற, கைரேகை பிரிவில் பணிபுரியும் காவலர் ஏழுமலை என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் உத்தரவிட்டுள்ளார்.