திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு வந்த பேரிடி செய்தி | Tiruthani Murugan Temple
பழனி சித்தநாதன் என்ற பெயரில் செயல்பட்டு வரும் நான்கைந்து கடைகளில் விற்கப்படும் பஞ்சாமிர்த பாட்டில்களில் காலாவதி தேதி குறிப்பிடப்படாதது குறித்து புகார்கள் குவிந்த நிலையில் கோயில் இணை ஆணையர் ரமணி, ஆய்வு செய்து கடையில் இருந்த 250 கிராம் 100 கிராம் என பல்வேறு ரகங்களில் வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 20 கிலோவிற்கும் அதிகமான பஞ்சாமிர்தத்தை பறிமுதல் செய்து குப்பை தொட்டியில் வீசினார். அதேபோல் கோயில் வளாகத்தில் அனுமதி இன்றி ஆக்கிரமித்து நடத்திய தேங்காய் பூ பழக்கடைகளில் இருந்த பொருட்களையும் சாலையில் வீசி சென்றதால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.