திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.60 முதல் 80 நாட்கள் ஆன நெற்பயிர்களுக்கு உரம் இட வேண்டிய நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் கடைகளில் டிஏபி யூரியா தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக மாங்குடி, வடகரை, வடபாதிமங்கலம், விக்கிரபாண்டியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் பயிர்களுக்கு உரம் இட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஒரு சில தனியார் கடைகள், உரத்தை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு செலவு ஏற்படுவதாக கூறுகின்றனர்.