கடலூரில் நள்ளிரவில் நடந்த கோரம்..ரத்த வெள்ளத்தில் துடித்து அடங்கிய தவாக நிர்வாகியின் உயிர்
கடலூர் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் முதுநகர் சான்றோர்பாளையம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் சங்கர். கட்டிட தொழில் செய்து வந்த சங்கர், தமிழக வாழ்வுரிமை கட்சி பொறுப்பிலும் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் சங்கர் சுத்துக் குளம் அருகே தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.