“ஒரே அசிங்கமா போச்சு குமாரு..'மொத்த ஊர் முன்னிலையிலும் சந்தி சிரித்த தருணம்..வைரல் வீடியோ

Update: 2024-12-16 13:11 GMT

பாலத்தின் மீது மிகவும் ஆபத்தான முறையில் அமர்ந்து ஏதோ வீட்டில் இருப்பதைப்போல காலை ஆட்டிக் கொண்டு ஹாயாக மது அருந்திக் கொண்டிருந்தனர்... இது அவ்வழியே சென்ற பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது... தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், ஈரோடு பவானியைச் சேர்ந்த அந்த மது அருந்திய நபர்களைக் கையும் கிளாசுமாக பிடித்தனர்... இதில் ஹைலைட்டான விஷயமே, கெத்தாக பாலத்தின் மீது மது அருந்தியவர்களை அனைவர் முன்னிலையிலும் பள்ளி மாணவர்களைப் போல் தோப்புக்கரணம் போட விட்டதுதான்... பதின் பருவத்தினராக இருந்தால் கூட ஒன்றும் தெரிந்திருக்காது... ஆனால் அனைவரும் வயது வந்தவர்கள் என்பதால் “ஒரு பெரிய மனுசன இப்படிப் பண்ணலாமா... ஒரே அசிங்கமா போச்சு குமாரு...“ என்ற தொணியில் கூச்சப்பட்டுக் கொண்டே நெளிந்தபடி தோப்புக்கரணம் போட்டு அவ்விடத்தை விட்டு துண்டைக் காணோம் துணியக் காணோம் என்று தெறித்து ஓடினர்...

Tags:    

மேலும் செய்திகள்