கட்டிங் போட்டுவிட்டு.. கட்டையால் அடித்த விரோதி - அதிர வைக்கும் CCTV காட்சி

Update: 2024-06-18 12:28 GMT

தென்காசியில், முறைத்து பார்த்ததாகக் கூறி, மது போதையில் இருந்த இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒருவரை வீடு தேடிச் சென்று கட்டையால் தாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. தென்காசி மாவட்டம் பாறையடி 2ம் தெருவை சேர்ந்த ஜமால் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உசைன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், உசைன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜமாலின் வீட்டிற்குச் சென்று கட்டைகளை கொண்டு சரமாரியாக தாக்கினார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, இருதரப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்