அன்று இரவு பதிவான வீடியோ - அந்த உருவத்தை பார்த்து நடுங்கும் மக்கள்

Update: 2025-01-30 14:58 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சிறுத்தை நடமாட்டம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. செழுக்காடி பகுதியில் வளர்ப்பு நாய்கள் திடீர் திடீரென காணாமல் போயுள்ளது. இதனால் சிறுத்தை நடமாட்டம் இருக்க கூடும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் இருந்த நிலையில், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பாக இருந்த சிசிடிவி கேமராவில் அதிகாலை சிறுத்தை ஒன்று நடமாடிய காட்சிகள் பதிவாகியுள்ளது. இரண்டாவது முறையாக அதே பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உறுதியான நிலையில் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்