மனைவியுடன் தகராறு - மின்கம்பி மீது பாய்ந்து கணவர் தற்கொலை

x

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் உயர் அழுத்த மின் கம்பியின் மீது விழுந்து தற்கொலை செய்து கொண்ட கணவன்.


மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக விரக்தி அடைந்த கணவன் உயர் அழுத்த மின் கம்பியை தொட்டதால் உடல் கருகி உயிரிழந்த நிகழ்வு உத்தர பிரதேச மாநிலத்தில் அரங்கேரி உள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் எட்டா பகுதியில் உள்ள கோட்வாலி நகர் பகுதியை சேர்ந்த அந்த 45 வயதாகும் கோவிந்த் என்ற நபருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து மனைவி கோபித்துக் கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.


இதனால் விரக்தி அடைந்த கோவிந்த் அருகில் இருந்த உயர் அழுத்த மின் கம்பத்தின் மீது ஏறியதோடு 11 கிலோவாட் திறன் கொண்ட மின்சார வயர் மீது கை வைத்தார்.

இதன் காரணமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சில நிமிடங்களிலேயே உடல் கரிக்கட்டையாகி அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்

மனைவி திரும்பி வரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என கோவிந்த் மிரட்டி உள்ளார்.

இருப்பினும் கணவர் மிரட்டலுக்காக அவ்வாறு சொல்கிறார் என நினைத்த மனைவி அவருடைய சொல்லை பொருட்படுத்தவில்லை.

தன்னுடைய மிரட்டலை மனைவி பொருட்படுத்தாததால் இந்த விபரீதமான முடிவை எடுத்தது கடைசியில் அவருடைய உயிரையே பரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்