குளத்தில் மிதந்த ஆண் சடலம் - யார் அந்த நபர்
தஞ்சை அருகே சிங்கபெருமாள் குளத்தில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை ரெட்டிபாளையம் சாலையில் உள்ள சிங்கப்பெருமாள் குளத்தில் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார், சடலத்தை மீட்டனர். அதேசமயம், முகம் முழுவதுமாக சிதைந்ததால், உயிரிழந்தவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story