``தமிழகத்திற்கு தடை..'' - ராமதாஸ் ஆவேச அறிக்கை | Ramadoss

Update: 2024-12-16 12:56 GMT

திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்கவில்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

2023-24இல் தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் 11 ஆயிரத்து 650 ஆக இருந்த நிலையில், கடந்த ஓராண்டில் 400 புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதேகாலத்தில் உத்தரப்பிரதேசம் 2 ஆயிரத்து 522 புதிய இடங்களையும், மகாராஷ்ட்ரா ஆயிரம் புதிய இடங்களையும் உருவாக்கியுள்ளன.

கடந்த ஓராண்டில் புதிய இடங்களை உருவாக்குவதில் தமிழ்நாடு ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கவும், கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை உருவாக்கவும், தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித்துள்ளது.

நடப்பாண்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளையும், மாணவர் சேர்க்கை இடங்களையும் அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்