தமிழகத்தில் இன்று , நாளை - வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்

Update: 2024-05-02 12:15 GMT

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை வாட்டி வரும் நிலையில், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களின் அநேக இடங்களில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோன்று மே 4 முதல் 6-ஆம் தேதி வரை வடதமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் 5 நாட்களுக்கு உள் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும், இன்று முதல் 3 நாட்களுக்கு வட மாவட்டங்களில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் வெப்பநிலை பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு 29 முதல் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்