``பாஜகவின் கணக்கு தவறாக போகாது'' - தமிழிசை கருத்து
திமுகவுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என, முதலமைச்சருக்கு பயம் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வரின் கணக்கு தவறாக போகலாம், ஆனால் தங்களின் கணக்கு சரியாக இருக்கும் என தெரிவித்தார். மத்தியில் இருந்து கூட்டணி கணக்கு வந்தவுடன், அதற்கு ஏற்ப தமிழக பாஜக செயல்படும் எனவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
Next Story