செருப்பால் அடிக்க சொன்ன விஷால்...சூறாவளியாய் சீறிய ஸ்ரீரெட்டி - நெஞ்சில் ஈட்டியை இறக்கிய அந்த கேள்வி
செருப்பால் அடிக்க சொன்ன விஷால்
திடீர் சூறாவளியாய் சீறி வந்த ஸ்ரீரெட்டி
நெஞ்சில் ஈட்டியை இறக்கிய அந்த கேள்வி
மறக்க முடியாத நாளான 48வது பர்த்டே
நடிகை ஸ்ரீரெட்டி யாரென்றே தனக்கு தெரியாது என விஷால் பேட்டியளித்திருந்த நிலையில், விஷாலை தாக்கும் வகையில் எக்ஸ் வலைதளத்தில் ஸ்ரீரெட்டி பதிவிட்ட பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
கேரளாவை உலுக்கி இருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை, தமிழ் சினிமாவையும் ஆட்டம் காண வைத்து வருகிறது...
இந்நிலையில், தன் 48 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷாலிடம் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேட்கப்பட்டது...
நடிகை ஸ்ரீரெட்டி யாரென்றே தனக்கு தெரியாது என்றும், அவரின் சேட்டைகள் மூலம்தான் தனக்கு ஸ்ரீரெட்டியை தெரியும் என விஷால் கூறியதும், இதற்கு பதிலளிக்கும் வகையில் ஸ்ரீரெட்டி பதிவிட்ட எக்ஸ் வலைதள பதிவும்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...
தாங்கள் ஒரு பெண்னை பற்றி ஊடகத்தின் முன் பேசும் போது நாவடக்கம் தேவை என குறிப்பிட்ட ஸ்ரீரெட்டி, உங்கள் வாழ்க்கையில் பல பெண்கள் உங்களை விட்டுச் சென்றதற்கான காரணம் என்ன? உங்கள் நிச்சயதார்த்தம் நின்றது எதனால்? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்..
தொடர்ந்து, பெரிய பொறுப்பில் இருப்பது முக்கியமல்ல, மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் எனவும் பதிவிட்டிருந்ததது ஸ்ரீரெட்டி Vs விஷால் இடையேயான மோதலை மீண்டும் பூதாகரமாக்கி இருக்கிறது..
ஸ்ரீரெட்டிக்கும் விஷாலுக்கும் இடையேயான மோதல் கடந்த 5 வருடங்களுக்கு முன்பே தொடங்கியது...
கடந்த 2019இல் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் போது, நடிகர் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் ஸ்ரீரெட்டி...
விஷாலோடு இல்லாமல் தமிழ் திரையுலகத்தின் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதும் இவர் பாலியல் குற்றச்சாட்டு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது...
தொடர்ந்து, தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக தன்னை பலர் படுக்கை அறைக்கு அழைத்ததாக குற்றம் சுமத்தியிருந்த ஸ்ரீரெட்டி, தெலுங்கு நடிகர் சங்கத்தின் முன் அரை நிர்வாணப் போராட்டமும் நடத்தி அம்மாநிலத்தையே அதிர வைத்திருந்தார்...
இந்நிலையில்தான் விஷால் Vs ஸ்ரீரெட்டி இடையேயான மோதல் மீண்டும் ஆரம்பமாகி இருக்கிறது.. அதுவும் இந்த ஹேமா கமிட்டி அறிக்கையினூடே பூதாகரமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...,